சின்னப்பாடு கடல் பகுதியில் 700 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியது

2020 பெப்ரவரி 07 ஆம் திகதி சின்னப்பாடு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியில் 700 கிலோ எடையுள்ள ஈரமான பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க கடற்படை வழக்கமான தேடல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி,பெப்ரவரி அன்று பத்தளம், உடப்பு மற்றும் சின்னப்பாடு கடல்களில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான பொதிகள் கடலில் மிதந்து கிடந்தன. அதன்படி பொதிகள் மீட்டெடுக்கப்பட்டு, தொகுக்கப்படாத நிலையில், 700 கிலோ எடையுள்ள ஈரமான பீடி இலைகள் இருந்தன. பின் பீடி இலைகள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டது.

பீடி இலைகள் கடத்தல்காரர்களனால் வழக்கமான கடற்படை ரோந்துகளால் விடப்பட்டதாக நம்பப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் உடனடியாக சின்னபாடு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.