கடற்படை தனது 72 வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடியது
72 ஆவது சுதந்திர தின விழா இன்று (பெப்ரவரி 04) கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆயுதப்படைகளின் தலைவர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆதரவின் கீழ் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர், விமானப்படையின் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குனிதிலக, கடற்படையின் அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொட ஆகியோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இராஜதந்திரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய தினக் கொண்டாட்டம் தேசியக் கொடியை ஜனாதிபதியால் ஏற்றியதன் பின் தொடங்கியது.
சுதந்திர தின கொண்டாட்டங்களில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கொமடோர் பிரதீப் ரத்நாயக்க முன்ணனியில் இருந்ததுடன்,கொமாண்டர் ஹரித தீக்ஷணவினால் கடற்படை படை அணிகளுக்கு கட்டளையிடப்பட்டது.இலங்கை கடற்படையின் அணிவகுப்பு, கடற்படை வீரர்கள் 713 பேரை கொண்ட 6 பிரிவுகளுடன் காணப்பட்டது. இலங்கை கடற்படை தலைமணகத்தை பிரதிநித்துப்புத்தும் வகையில் லெப்டினன்ட் கமாண்டர் ஹேமந்தா பெரேராவும், அஃப்லட் கட்டளைகளில் லெப்டினன்ட் கமாண்டர் சமிந்தா வால்குலுகேவும் மற்றும் லெஃப்டினென்ட் கமாண்டர் யாப்பா ஜயசிங்க போர்க்கப்பலில் லெப்டினென்ட் கமாண்டர் கருணாரத்ன வும் கலந்து இந் நிகழ்வை சிரப்பித்தனர். அணிவகுப்புக்கு தளபதி அனுருத்தா பெர்னாண்டோ கட்டளையிட்டார். இதில் இலங்கை கடற்படையின் முதன்மை தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் பாகங்கள் இடம்பெறும் மதிப்புமிக்க வாகன அணிவகுப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கடற்படைக்கு புதிதாக சேர்க்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களான கஜபாஹுவும் கலந்து கொண்டது. இலங்கை கடற்படை கப்பல்கள் சூரனிமல மற்றும் நந்திமித்ர ஆகியவையுடன் பராக்ரமபாஹு மற்றும் சிந்துரல ஆகியவையும் சுதந்திர தின கொண்டாட்டத்தை காலி முகத்திடத்தில் தமது மரியாதையை செலுத்தின.