சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது

காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை 2020 பெப்ரவரி 3 ஆம் திகதி கதான்குடி பகுதியில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்தது.

காவல்துறையுடன் ஒருங்கிணைந்து கடற்படை கதான்குடி பகுதியில் சோதனை நடத்திய போது இந்த சந்தேக நபரை அவதானித்தது. மேலும் விசாரிக்கையில் அவரிடம் இருந்த 240 சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்கப்பட்டன. அதன்படி, சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் கடற்படை காவலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபர் சட்டவிரோதமாக சிகரெட்டுகளுடன் காத்தாங்குடிகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.