179 சங்குகளுடன் ஒரு நபர் கடற்படையால் கைது
கிரிந்த பகுதியில் 2020 பிப்ரவரி 03 ஆம் திகதி நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத 179 சங்குகளுடன் ஒரு நபர் கடற்படையால் (03) கைது செய்யப்பட்டது.
அதன்படி, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை மேற்கொண்ட மற்றொரு சோதனை நடவடிக்கை யாழ்ப்பாணம், சாடி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு விற்பனைக்காக சேகரிக்கப்பட்ட 179 சங்குகளுடன் ஒரு நபர் கைது செய்யபட்டார். கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் மான்குழம் பகுதியில் வசிக்கின்ற 47 வயதுடைய ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் மற்றும் சங்குகள் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் துனை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.