மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நிர்மானிக்கப்பட்ட வெடிபொருட்களை கடற்படை கைப்பற்றியது

மன்னார் பல்லேமுனை பகுதியில் இன்று (2020 பிப்ரவரி 03) மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் அழகிய பவளப்பாறைகள் உட்பட இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் கடல் வளங்கள் சேதமடைகிறது. மேலும் அதைக் கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன் படி மன்னார் பல்லெமுனை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதுகொந்தப்பிட்டி துறைமுக பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள முன்று ஜெலட்னைட் குச்சிகள் மற்றும் சேவை நூல்கள் கொண்ட 03 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், கடற்படையால் மேற்கொள்கின்ற தேடுதல் நடவடிக்கைகள் காரணத்தினால் இந்த வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளன, மேலும் சேவை நூல்கள், ஜெலிக்னைட் குச்சிகள் மற்றும் மின் அல்லாத டெட்டனேட்டர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.