சுமார் 300 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது
யாழ்ப்பாணம் பூங்குடுதீவு கடல் பகுதியில் இன்று ( 2020 பிப்ரவரி 2) மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியில் போது சுமார் 300 கிலோகிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படை கண்டுபிடித்துள்ளது.
தீவைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தில் இலங்கை கடற்படை தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. இன்று (2020 பிப்ரவரி 2) யாழ்ப்பாணம் பூங்குடுதீவு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று ஆய்வு செய்யப்பட்டதுடன் குறித்த படகில் இருந்து சுமார் 300 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. அங்கு படகில் இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன. அவர்கள் அளித்த தகவல்களின் பேரில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் சங்குபிட்டி பகுதியில் வைத்து கடற்படை கைது செய்தது.
மேலும், கடத்தல்காரர்களால் கேரள கஞ்சா நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாலும் கடற்படையின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளினால் இந்த கடத்தல் நடவடிக்கையை நிறுத்த முடிந்தது, கடற்படையால் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
|