பெருங்கடலில் நிறுவப்பட்ட கடல்சார் தரவுகளை சேகரிக்கும் Seaglider கருவிகள் அகற்ற கடற்படை உதவி
தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாமை அதிகாரிகள் கடற்படையுடன் இணைந்து 2020 ஜனவரி 30 ஆம் திகதி கடல்சார் தரவுகளை சேகரிக்கும் இரண்டு (02) Seaglider கருவிகளை சரிசெய்வதுக்காக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
Seaglider கருவி மூலம் கடல்சார் தரவு சேகரிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, காலநிலை மாற்ற ஆய்வுகள் மற்றும் மீன்வள ஆராய்ச்சி தரவுகளை சேகரிக்கப்படுகிறது. காலி நீர்முனையில் இருந்து 20 கடல் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த உபகரணங்கள் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை அதிகாரிகள் மற்றும் ஒரு அமெரிக்க விஞ்ஞானியின் பங்கேற்புடன் சம்பவ இடத்திலிருந்து அகற்றி அதிவேக ரோந்து படகொன்று மூலம் இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தின் படகுத்துறைக்கு கொண்டுவரப்பட்டன.
தேசிய நீர்வாழ் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க தேசிய விஞ்ஞானி ஆகியோர் தெற்கு கடற்படைப் பகுதியின் தளபதியின் ஆலோசனையின் படி கடற்படையினர் வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டினர். இவ்வாரான எந்தவொரு சூழ்நிலையிலும் பங்களிக்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.
|