வலையில் சிக்கி இருந்த அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமை கடற்படை மீட்டுள்ளது
2020 ஜனவரி 28 ஆம் திகதி கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கு கடல் பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கி இருந்த ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமையை கடற்படை மீட்டுள்ளது.
2020 ஜனவரி 28 அம் திகதி கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கு கடல் பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கி இருந்த அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்குள்ளான ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடல் ஆமையை வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ரோந்து படகொன்று மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடற்படையினரினால் ஆமை கப்பலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வலை அகற்றிய பின் கடலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள இந்த கடல் ஆமைகளைப் பாதுகாக்க கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.