ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களின் கடல் அறிவியல் ஆராய்ச்சிக்கு கடற்படை உதவி
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்றய தினம் (2020 ஜனவரி 26) கடற்படையுடன் இனைந்து கடல் அறிவியல் ஆராய்ச்சி திட்டமொன்று ரூமச்சல கடற்கரையில் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் புவியியல் ஆராய்ச்சி பீடத்தைச் சேர்ந்த பதினேழு (17) மாணவர்கள் மற்றும் 10 ஊழியர்கள் பங்கேற்றனர். ஆய்வக பகுப்பாய்விற்காக ருமச்சல கடற்கரையிலிருந்து கடல் நீரின் மாதிரிகளை சேகரிக்க வந்த கடல்சார் துறையின் மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்குவதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது.
மேலும், தெற்கு கடற்படை கட்டளை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் பணிக்கு உதவ ஒரு கடற்படை படகு மற்றும் ஒரு கடற்படை குழு நிறுத்தப்பட்டது. படகு மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது மற்றும் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் கடற்படை பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.