கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
2020 ஜனவரி 25 ஆம் திகதி கிலிணொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் கேரள கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு (02) நபர்களை கடற்படை மற்றும் காவல்துறை கைது செய்துள்ளன.
2020 ஜனவரி 25 அன்று இலங்கை கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து கிலிணொச்சி பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சாலையில் பயணித்த இரண்டு (02) சந்தேக நபர்களை கண்கானித்தனர். குறித்த சந்தேகநபர்களை மேலும் சோதனை செய்த போது விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 3 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரயும் கைது செய்யப்பட்டுளனது. அங்கு ஒரு சந்தெகநபரிடமிருந்து 2 கிலோ 500 கிராம் மற்றும் மற்ற சந்தேகநபரிடமிருந்து 500 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் 31 மற்றும் 34 வயதுடைய விஸ்வமடு மற்றும் அரேயக்கார் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் 03 கிலோ கிராம் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையால் கிலிணொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும், இலங்கை கடற்படை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.