கடற்படை நடவடிக்கையின் முலம் இரண்டு டெட்டனேட்டர்கள் மற்றும் இரண்டு ஜெலிக்னைட் குச்சிகளைக் கண்டுபிடிக்கப்பட்டது
கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு மன்னார், சவுத் பார் பகுதியில் இன்று (2020 ஜனவரி 20,) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு டெட்டனேட்டர்கள் மற்றும் இரண்டு ஜெலிக்னைட் குச்சிகளை மீட்டுள்ளனர்.
அதன் படி, வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடிப்பது மூலம் கடல் சுற்றுச்சூழல் கடுமையாக சேதமடைகிறது இதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜனவரி 20 ஆம் திகதி மன்னார், சவுத் பார் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது கடற்கரையில் கைவிடப்பட்டுள்ள இரண்டு டெட்டனேட்டர்கள் மற்றும் இரண்டு ஜெலிக்னைட் குச்சிகளைக் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் காரணமாக இந்த வெடிபொருட்கள் கைவிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு ஜெலிக்னைட் குச்சிகள் மற்றும் இரண்டு மின்சாரம் இல்லாத டெட்டனேட்டர்கள் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
|