கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை (04) கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் காவல்துறை கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கின்னியா பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 1 கிலோ 516 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை கைது செய்யப்பட்டது.
மதுவிலக்கு இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை கின்னியா காவல்துறையுடன் கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கின்னியா பகுதி மையமாக கொண்டு சோதனை நடவடிக்கை யொன்று மேற்கொண்டுள்ளனர். அதன் படி 2020 ஜனவரி 19 ஆம் திகதி சந்தேகமான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்கானித்த கடற்படையினர் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்த போது சுமார் 01 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடித்துள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தெகநபர்கள் மோட்டார் சைக்கிள்கள், மற்றும் கேரள கஞ்சா கடற்படையால் கைது செய்யப்பட்டது.மேலும் 2020 ஜனவரி 20 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகமான ஒரு மோட்டார் சைக்கிளை கண்கானித்த கடற்படையினர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது சுமார் 516 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடித்துள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தெகநபர், மோட்டார் சைக்கிள், மற்றும் கேரள கஞ்சா கடற்படையால் கைது செய்யப்பட்டது.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 19, 26, 30 மற்றும் 35 வயதுடை அப்பகுதியில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1கிலோ 516 கிராம் கேரள கஞ்சா குறித்து கின்னியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.