சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு 2020 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட நெடுந்தீவு வட மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட வழக்கமான ரோந்துப் பணியின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய மீன்பிடி படகு கைது செய்யப்பட்டது. இந்த படகு காங்கேசந்துரை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டபோது கடலில் மூழ்கியது படகில் தண்ணீர் கசிந்த காரணத்தினால் மற்றும் கடுமையான கடல் சூழ்நிலை காரணமாக படகு பலவீனமடைந்து கடலில் மூழ்கியதாக சந்தேகிக்கப்பட்டது. பாழடைந்த மீன்பிடி படகுகளைப் பயன்படுத்துவதால் பல இந்திய மீன்பிடிக் படகுகள் இதற்கு முன்பும் இலங்கை கடல் பகுதியில் மூழ்கியுள்ளன. இந்த சம்பவம் குறித்து கடற்படை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறதுடன் படகில் இருந்த அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மீனவர்கள் 29, 33, 34 மற்றும் 50 வயதுடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
காங்கேசந்துரை துறைமுகத்திற்கு கொண்டு வந்த மீனவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துப்பணியின் விளைவாக, இலங்கை பிராந்திய கடல் எல்லை மீறும் இந்திய மீன்பிடி இழுவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், கடற்படை தனது வளங்களை உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், தீவின் பிராந்திய நீரில் மீன் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து செயல்படும்.
|