கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிள் கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் கலால் பிரிவு 18 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

மதுவிலக்கு இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை சாவகச்சேரி கலால் பிரிவுடன் இனைந்து யாழ்ப்பாணம் சாவக்காச்சேரி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நிறுத்தப்பட்டுள்ள ஒரு மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தது. அங்கு மோட்டார் சைக்கிளை மேலும் ஆய்வு செய்த போது சுமார் 18 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்படை அடிக்கடி மேற்கொள்கின்ற சோதனை நடவடிக்கைகளின் காரணமாக, சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா 18 கிலோ 300 கிராம் மற்றும் மோட்டார் சைக்கிள் குறித்து மேலதிக விசாரணைகள் சாவகச்சேரி கலால் பிரிவு மேற்கொள்கிறது