கடற்படை மேற்கொள்கின்ற கடலோரப் பாதுகாப்பு பணிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதம்

இலங்கை கடற்படை நடத்திய கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வெற்றிகரமான முன்னேற்றம் தற்போது கண்காணிக்கப்படுகிறது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (2020 ஜனவரி 18) காலி முகத்திடல் கடற்கரையில் ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது கடற்படை மேற்கொண்ட பணிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதங்களைக் காட்டும் வகையில் காலி முகத்தில் கடற்கரையில் ஒரு அரிய பார்வையான கடலாமை முட்டைகள் காணப்பட்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், கடலாமை முட்டைகளை அந்த இடத்திலேயே பாதுகாப்பாக பாதுகாக்க கடற்படை வீரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடற்படை தற்போது தனது சட்டரீதியான கடமைகளைத் தாண்டி நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பங்களிப்பு செய்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தீவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் மாற்றும் தேசிய பணிக்கு கடற்படை பங்களிக்கிறது. இதற்கு ஆதரவாக, அனைத்து கடற்படை கட்டளைகளிலும் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், கடல் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை கடற்படை அடையாளம் கண்டுள்ளதுடன், மிகவும் திறமையான பணியாளர்களைக் கொண்ட கடற்படை தீவைச் சுற்றியுள்ள அனைத்து கடற்கரைகளும் உள்ளடக்கி கடற்கரையை சுத்தமான, தடையற்ற கடற்கரையாக மாற்றுவதற்கும், கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் ஒரு பெரிய பணி மேற்கொள்கின்றது.