போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 17 ஆம் திகதி தோப்புர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 36 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி கடற்படை முத்தூர் பொலிஸாருடன் ஒருங்கிணைந்து தோப்பூர் பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை நிருத்தி மேலும் பரிசோதித்தனர் அப்போது 36 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியில் இருந்த சந்தேக நபரையும் கைது செய்யப்பட்டது.

சந்தேக நபர் தோப்பூர் பகுதியில் வசிக்கும் 39 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முத்தூர் பொலிசார் முச்சக்கர வண்டி, சந்தேக நபர் மற்றும் 36 கிராம் ஹெராயின் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.