சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் முன்று நபர்கள் கடற்படையால் கைது
2020 ஜனவரி 16 ஆம் திகதி மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த முன்று நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கடல் மற்றும் மீன் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மற்றொரு நடவடிக்கை மன்னார் எருக்குளம்பிட்டி கடல் பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்கானித்த கடற்படை அதை ஆய்வு செய்தனர். மேலும் மேற்கொண்ட விசாரணையின் போது சட்டவிரோதமாக பிடித்த 24 கிலோ கிராம் கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இவர்களை கைது செய்யப்பட்டன.
சந்தேக நபர்கள் மன்னார் பகுதிகளில் வசிக்கின்ற 22,33 மற்றும் 47 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாரு கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், படகு, மற்றும் மீன்பிடி பொருட்கள் மெலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிலினோச்சி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
|