கடலில் பாதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு
2020 ஜனவரி 16 ஆம் திகதி பல நாள் மின்பிடி படகில் காயமடைந்த ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர வடக்கு கடற்படை கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.
2019 டிசம்பர் 28 ஆம் திகதி மாதரை சுதுவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அமீந்திரா 4 என்ற பல நாள் மீன்பிடிக் படகில் இருந்த ஒரு மீனவர், பருத்தித்துறைக்கு 138 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள வடகிழக்கு கடல் பகுதியில் காயமடைந்தார். மீன்வள மற்றும் நீர்வளத் துறையால் கிடைக்கப்பட்ட தகவலின்படி உடனடியாக வடக்கு கடற்படை கட்டளையின் படகொன்று மீனவரை கரைக்கு கொண்டுவர அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் படி, பாதிக்கப்பட்ட இந்த மீனவரை கடற்படையால் கண்டுபிடித்து பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் நோயாளி மருத்துவ சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இலங்கை கடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
|