சேவையை விட்டு வெளியேறிய கடற்படையினருக்கு பொது மன்னிப்பு காலம்

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படை சேவையில் இருந்து வெளியேறிய கடற்படைப் பணியாளர்களுக்கு ஒரு வெளியேற்றத்தைப் பெற அல்லது மீண்டும் சேர, நாட்டிற்கு தங்கள் தேசிய சேவையைத் தொடர வாய்ப்பு வழங்கும் வகையில் ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடைய உத்தரவின் பேரில் முப்படைகளின் உறுப்பினர்களுக்கு ஒரு வார கால பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2020 பிப்ரவரி 05 முதல் ஒரு வாரம் (07 நாட்கள்) காலம் இவ்வாரு பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது 2019 செப்டம்பர் 30 க்கு முன்னர் கடற்படையை விட்டு வெளியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கடற்படையை விட்டு வெளியேறியவர்களுக்கு அருகிலுள்ள கடற்படைத் தளத்திற்கு அறிக்கை அளித்து கடற்படையை விட்டு வெளியேற அல்லது கடற்படையில் மீண்டும் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல கஷ்டங்களை எதிர்கொண்டு கடினமான சூழ்நிலைகளில் தேசத்திற்கு சேவை செய்த மற்றும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் அந்தந்த சேவைகளை விட்டு வெளியேறிய முத்தரப்புப் படையினருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த நடவடிக்கை அதி மேதகு ஜனாதிபதியால் எடுக்கப்பட்டுள்ளது.