சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்கள் கைது செய்ய கடற்படை அதரவு
2020 ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை தோப்பூரில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையின்போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 02 நபர்களை கடற்படை கைது செய்தது.
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, திருகோணமலை, தோப்பூர் பகுதியில் முத்தூர் பொலிஸாருடன் இனைந்து மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது இரண்டு (02) நபர்கள் இரண்டு (02) கை டிராக்டர்களால் மூன்று கால்நடைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்று கொண்டிருந்த்தை கண்கானித்தனர். மேலும் மேற்கொண்டுள்ள விசாரணையில் டிராக்டர்களுக்குள் இரண்டு கை கத்திகள் மற்றும் ஒரு கோடாரி இருப்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் 25 மற்றும் 40 வயதுடைய தோப்பூர் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கால்நடைகள் கொலை செய்யும் நோக்கத்துடன் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள், இரண்டு டிராக்டர்கள், ஒரு கை டிராக்டர், ஒரு கோடாரி, மற்றும் மாடுகள் குறித்து முத்தூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.