மீனவர்களின் வலைகளில் சிக்கிய கடலாமைகளை கடற்படை மீட்டுள்ளது

கடந்த சில நாட்களாக மன்னார் கடற்கரையில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய பல கடலாமைகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களில், தலைமன்னார் கடற்கரையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலைகளில் சிக்கிய சுமார் 10 ஆமைகளை கடற்படை மீட்டு மீண்டும் கடலுக்கு விடுவித்தது.

கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல்களிலும், கடலோரப் பகுதியிலும் தினசரி ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை நடத்துகிறது. மேலும், சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றதுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் பிடித்த கடலாமைகள் மற்றும் வலைகளில் சிக்கிய ஏராளமான கடல் ஆமைகளின் உயிரைக் காப்பாற்றி அவற்றை மீண்டும் கடலுக்கு விடுவித்துள்ளது.

குறிப்பாக, ஏழு வகையான கடல் ஆமைகள் ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்து வகைகள் இலங்கை கடற்கரையில் காணப்படுகின்றன. ஆபத்தான இந்த உயிரினங்களை பாதுகாக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கருத்தாக்கமான நீல பசுமைப் போர் குறியீட்டின் கீழ் கடல் ஆமைகளை பாதுகாப்பு குறித்து கடற்படை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.