தீவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை சுத்தப்படுத்த கடற்படை பங்களிப்பு
இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று (2020 டிசம்பர் 11) அன்று வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதிமேதகு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கருத்தான 'பாதுகாப்பான சுற்றுச்சூழல்' என்ற கருத்தையும் இது மூலம் செயல்படுத்த கடற்படை எதிர்பார்க்கிறது.
இந் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசந்துரை கடற்கரைகள் கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டன. மேலும், தென் கடற்கரையைச் சேர்ந்த மஹமோதர, கின்தோட்ட, தங்காலையில் ஒருவெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டையில் இந்திவிந்ந கடற்கரைகளையும் கடற்படை சுத்தம் செய்தது. கடற்படைப் பணியாளர்களின் அயராத முயற்சியால் பல காரணங்களால் கடுமையாக மாசுபட்ட கடற்கரைகளின் முந்தைய அழகை மீட்டெடுக்க முடிந்தது. இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளை கடற்படை பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக அழகிய கடலோர பகுதியாக மாற்ற முடிந்தது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், இலங்கையைச் சுற்றியுள்ள கடலோர பகுதியை சுத்தம் செய்கின்ற நடவடிக்கைகள் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் நடைபெறுகின்றதுடன் இத் திட்டம் முலம் தீவைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகின்றது.
வடக்கு கடற்படை கட்டளையில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்
தெற்கு கடற்படை கட்டளையில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்
|