துப்பாக்கியுடன் ஒருவரைக் கைது செய்ய கடற்படை உதவி
2020 ஜனவரி 10 ஆம் திகதி வாலச்சேனை குரிஞ்சிநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது டி 56 தாக்குதல் துப்பாக்கியுடன் ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.
தேசிய பாதுகாப்புக்காக தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படை போலீஸ் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) உடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அப்போது சாலையில் பயனித்த சந்தேகத்திற்கிடமான ஒருவரை கண்காணித்த கடற்படையினர் மற்றும் காவல்துறை அவரை சோதனை செய்தனர். மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது, டி -56 துப்பாக்கியொன்று அவரது பைகளில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டன. அதோடு 7.62 x 39 மிமீ ரவைகள் 27 மற்றும் ஒரு மெகசின் கண்டுப்பிடிக்கப்பட்டன. சந்தேக நபரை விசாரித்தபோது கிரண் பகுதியில் இருந்து இந்த ஆயுதம் கொண்டு வரப்பட்டதை தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர் 23 வயதான கிரான் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர், டி 56 துப்பாக்கி, ரவைகள் மற்றும் மெகசினுடன் வாலிச்சேனை பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.