காலி கடல் பகுதியில் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற படகொன்று கடற்படையால் கைது
இன்று (2020 ஜனவரி 07) கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 15 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டிலிருந்து போதைப் பொருளை அகற்றும் தேசிய தேவைக்காக கடற்படை மற்றொரு நடவடிக்கை காலி கடல் பகுதியில் மேற்கொண்டுள்ளது. அதன்படி, காலி கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு படகை கண்கானித்த கடற்படையினர் குறித்த படகை பரிசோதனை செய்தனர். அப்போது படகு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் படகில் இருந்த சந்தேக நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டன.
குறித்த சந்தேகநபர்கள் 27, 28, 29, 31, 39 மற்றும் 45 வயதுடைய பேருவல மற்றும் கிங்தோட்டை பகுதிகளில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிராலர் படகு சட்ட நடவடிக்கைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மேலும், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதியைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலை நடத்த கடற்படையால் வாய்ப்பு கிடைக்காது. இந்த நோக்கத்திற்காக, இலங்கை கடற்படை தொடர்ந்து விழிப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.
|