போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிக்கும் பணியில் மற்றொரு கடற்படை சோதனை நடவடிக்கை

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிக்கும் பணியில் மற்றொரு கடற்படை சோதனை நடவடிக்கை

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, தீவில் ஏராளமான போதைப்பொருள் விற்பனையாளர்களைப் பிடிக்க உதவியுள்ளது. இத்தகைய போதைப்பொருள் வியாபாரி திருகோணமலையில் உள்ள பேக் பே பகுதியில் கைது செய்யப்பட்டார். மீனவர் வேடமணிந்த இந்த போதைப்பொருள் கடத்தல்கார்ரை, பேக் பே பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த கடற்படை சந்தேகத்திற்கிடமான நபரைத் விசாரித்தது. விசாரணையின் மூலம் இந்த நபர் திருகோணமலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டார், மேலும் அவர் கடற்படையால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் வசிக்கும் 21 வயதுடையவர் என அடையாலம் காணப்பட்டுள்ளார்.மேலும் இவர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை நாட்டிலும், கரையோரத்திலும் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.