கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது
நடவடிக்கைகளை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி முல்லைதீவு கல்லப்பாடு பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேபோன்ற ஒரு நடவடிக்கை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து முல்லைதீவு கல்லப்பாடு பகுதியில் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபரை கவனித்து அவரை ஆய்வு செய்தனர். அங்கு, அவரிடமிருந்து 430 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் முல்லைதீவு பகுதியில் வசிக்கும் 27 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது, கடற்படை பிராந்தியத்தில் மற்றொரு போதைப்பொருள் வியாபாரியை கைது செய்ய முடிந்தது. இந்த நபர் 35 வயதான முல்லைதீவு பகுதியில் வசிப்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். அங்கு போதைப்பொருட்களை விநியோகிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள், போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை முல்லைதீவு பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில், போதைப்பொருள் அச்சுறுத்தலை சமூகத்திலிருந்து ஒழிக்கும் முயற்சியில் கடற்படை தனது போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்ந்து மேற்கொள்ளும்.