சட்டவிரோதமாக இரத்தினக் கற்கள் விற்க முயற்சித்த 06 பேரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் இலங்கை போலீசார் இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின்போது சட்டவிரோதமாக ரத்தினக் கற்களை விற்பனை செய்த 6 பேரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதில் இலங்கை கடற்படை முன்னிலை வகிக்கிறதுடன் தற்போது பல செயல்பாடுகளும் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, கடற்படை மற்றும் இலங்கை போலீசார் இனைந்து கல்முனை சாய்ந்தமருது பகுதியில் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையின் போது சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வேன் வண்டியொன்று சோதனை செய்யப்பட்டது குறித்த வேன் வண்டி சோதனை செய்த போது வேனில் பயணித்த நபர்களிடமிருந்து 17 ரத்தின கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மேற்கொண்ட விசாரணையில், ரத்தின கற்கள் சட்டவிரோத விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்ததுடன், வேனில் பயணித்த 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணையில் சந்தேக நபர்கள் ரத்தின கற்கள் கடத்தல்காரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் 25,30,32,34,41 மற்றும் 43 வயதுடைய பிபிலை மற்றும் அம்பாறை பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.