சட்டவிரோத இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் வனவிலங்குத் துறை இனைந்து 2019 டிசம்பர் 30 ஆம் திகதி சிதுல்பவ்வ, கல்கடுவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படை வனவிலங்குத் துறையுடன் இனைந்து சிதுல்பவ்வ, கல்கடுவ பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இரண்டு இடங்களில் இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இங்கு முதலில், ½ ஏக்கர் கஞ்சா தோட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு 10 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா, 2 கிலோகிராம் கஞ்சா விதைகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலதிக விசாரணையில் கண்டுபிடித்த இடத்துக்கு அருகிலுள்ள ½ ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனைக்கு தயாராக உள்ள 10 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் 2 கிலோகிராம் கஞ்சா விதைகள் தீ வைத்து அளிக்க கடற்படை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குறித்து வனவிலங்கு துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடல் வழியாக மற்றும் இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து கடற்படை தனது பணியைத் தொடர்கிறது.