சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் குழுவை கடற்படை கைப்பற்றியது
2019 டிசம்பர் 26 ஆம் திகதி நெடுந்தீவுக்கு ஒரு படகு வந்துவிட்டதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது, மேலும் இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடற்படை கடந்த சில நாட்களாக ஒரு விரிவான நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் விளைவாக, 2019 டிசம்பர் 29 அன்று தலைமன்னார் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தலைமறைவாக உள்ள ஐந்து (05) சட்டவிரோத குடியேறியவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக நெடுந்தீவுக்கு வந்து பின்னர் தலைமண்ணாருக்கு திரும்பினர். தலைமன்னார் கேபிள் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது ஒரு பெண் மற்றும் 03 ஆண்கள் இவ்வாரு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில், மற்றொரு ஆண் (01) யாழ்ப்பாணம் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர்கள் இலங்கையர்கள் என்றாலும் அவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண்கள் 33, 36 மற்றும் 45 வயதுடைய தலைமன்னார், பேசாலை மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் என்றும் 63 வயதான கைது செய்யப்பட்ட பெண் இங்கிரிய பகுதியில் வசிப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் குறித்து தலைமன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.