போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு குறித்து மீன்பிடி சமூகத்துக்கான விழிப்புணர்வு திட்டமொன்று கடற்படை தலைமையில் கொழும்பில்,
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை கடற்படை, மீன்வள மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து 2019 டிசம்பர் 27 கொழும்பில் உள்ள கலங்கரை விளக்கம் உணவகத்தில் பல நாள் மீன்வள சங்க பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு திட்டமொன்று நடத்தினார்கள்.
அதன் படி, கடற்படை மீன்வள மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, மீனவர்களாக மாறுவேடமிட்டு பல்வேறு நபர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தலில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதை பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான கடற்படையின் எதிர் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கூறினார்.
அங்கு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களின் சட்டவிரோத இடம்பெயர்வு பற்றிய தகவல்களை உடனடியாக கடற்படை செயல்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பல்கள் அல்லது நபர்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் மீன்பிடிக் கப்பல்களில் பயணிக்கும் சந்தேகநபர்கள் பற்றி சரியான மேற்பார்வை தேவை என்பதும் தெரிவித்தார். பல நாள் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா மற்றும் ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தது குறித்தும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத குடியேறியவர்கள் அந்த நாடுகளிலிருந்து திருப்பி விடப்படுகிறார்கள் என்பதையும், கப்பல்கள் திரும்பப் பெறப்படாது என்பதையும் பங்கேற்பாளர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
மீன்பிடிக் படகுகள் செயலிழந்த காரணிகளால் மற்றும் அதன் குழுவினருக்கு அவசரநிலை ஏற்படும் போது அதுக்கான கடற்படை ஆதரவின் வழிமுறையை விளக்கினார். மேலும் மக்களின் உயிரைக் காப்பாற்ற கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தொழில்நுட்பக் குறைபாடுகள் அல்லது பிற காரணங்களால் மீன்பிடிக் கப்பல்கள் தோல்வியுற்றால், குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வளங்களை கடற்படை வழங்கும் என்று கடற்படை மேலும் சுட்டிக்காட்டினார்.
மீன்வள பிரதிநிதிகளும் தங்கள் பிரச்சினைகளை கடற்படைத் தளபதியிடம் வழங்கினர். மீன்வளத்துறை அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, அதிகபட்ச செயல்திறனை உறுதி செய்வதற்காக அனைத்து மீன்பிடி கப்பல்களிலும் (Vassals Monitoring System) வசல்ஸ் கண்காணிப்பு அமைப்பு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வுக்காக மீன்வள மற்றும் நீர்வளத் துறையின் கூடுதல் இயக்குநர் எஸ்.ஜே. கஹவத்த அவர்கள் உட்பட நாற்பத்தைந்து (45) மீனவர் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.