கடற்படை மற்றும் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையால் கேரள கஞ்சா மீட்பு
இன்று (டிசம்பர் 28, 2019) மன்னாரில் உள்ள கொன்னயன் குடியிருப்பு பகுதியில்,பொலீசாருடன் ஒருங்கிணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
தீவில் இருந்து போதைப்பொருளை ஒழிப்பதில் எப்போதும் பங்களிக்கும் இலங்கை கடற்படை, மன்னார் பகுதியில் பொலீஸ் பிரிவுடன் இணைந்து போதை பொருள் தடுப்பு நடவடிக்கையை நடத்தியது. இந்த சோதனையின்போது, மன்னாரில் உள்ள கொன்னயன் குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான மோட்டார் வண்டி கடற்படையினரால் கண்காணிக்கப்பட்டு, சாக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா சந்தேகத்திற்கிடமான மோட்டார் வண்டியில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த கஞ்சா தொகை ஐந்து பொதிகளில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கடற்படையின் தேடலைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சாவை பொலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
|