மோசமான வானிலைக்கு தீர்வு காண கடற்படையின் பல நிவாரண குழுக்கள்

இலங்கையில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக இலங்கை கடற்படை தீவின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைத்துள்ளது.

நாட்டில் ஏற்படுகின்ற அவசரகால சூழ்நிலையில் போது முன்னணியில் இருக்கும் இலங்கை கடற்படை, இப்போது தீவின் மோசமான வானிலை நிலைமைகளுக்கு தீர்வு காண ஏராளமான நிவாரண குழுக்களை அனுப்பி வருகிறது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், முழு தீவையும் உள்ளடக்கிய கடற்படை கட்டளைகளில் அவசரநிலைகளைக் கையாள கடற்படை நிவாரண குழுக்கள் தயாராக உள்ளன

இதுக்காக கடற்படையின் மரைன் பிரிவு, கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU), சிறப்பு படகு படை மற்றும் கடற்படை சுழியோடி பிரிவு அனைத்தும் விபத்து ஏற்பட்டால் உதவ தயாராக உள்ளன.

இது தவிர, கடந்த சில நாட்களில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழிவுநீரைத் தடுக்க பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுகளை சுத்தம் செய்ய கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் மக்களுக்கு உதவி வழங்க கடற்படை தயாராக உள்ளது.