கடல் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து கடற்படை நடவடிக்கைகள்

மயிலடி மற்றும் வெல்வெட்டித்துரை இடையே கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதியொன்று இலங்கை கடற்படை இன்று (டிசம்பர் 18) கண்டுபிடித்துள்ளது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படை எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை. கடற்படை வெல்வெட்டித்துரை கடல் பகுதியில் சோதனை நடவடிக்கை யொன்று மேற்கொண்டுள்ளதுடன் அங்கு 03 கேரள கஞ்சா பொதிகள் மயிலடி மற்றும் வெல்வெட்டித்துரை இடையே கடல் பகுதியில் மிதப்பதைக் கண்டறிந்தனர். அங்கு கடற்படையினர் வெல்வெட்டித்துரை கடற்கரையில் ஒரு தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டு இரண்டு கேரள கஞ்சா பொதிகளையும் மீட்டுள்ளனர். அதன் படி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐந்து பொட்டலங்களில் கிட்டத்தட்ட 70 கிலோகிராம் ஈரமான கஞ்சாவை மீட்கப்பட்டன.அவை 15 சிறிய பொட்டலங்களில் நிரம்பியுள்ளன.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது, மேலும் இலங்கை கடற்படை இலங்கை கடலோரப் பகுதிகளில் மேற்கொள்கின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இவ்வாரான சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்கலை கட்டு படுத்தப்படுகின்றன.மேலும் இந்த சம்பவம் குறித்து கடற்படை கண்காணித்து வருகிறது.