சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் 2019 டிசம்பர் 18 ஆம் திகதி ஹிக்கடுவை கடல் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்வதுக்காக கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை ஹிக்கடுவை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு சட்டவிரோத விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். கைது செய்த நபர்கள் அம்பலங்கொடை பகுதியில் வசிக்கின்ற 47 மற்றும் 64 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம், 08 LED ஒளி விளக்குகள் கடற்படையால் கைது செய்யப்பட்டன.
குறித்த நபர்கள், படகு, வெழி எரி இயந்திரம், ஒளி விளக்குகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், வெடிபொருட்கள் பயன்படுத்தல் போன்ற பல்வேறு சட்டவிரோத நடைமுறைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களால் நம் நாட்டைச் சுற்றியுள்ள கடலின் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றதுடன் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
|