காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண்ணை கடற்படை மீட்டது
டிசம்பர் 14 அன்று, காலி துறைமுகத்தின் கடல் துறைமுகத்தில் நீரில் மூழ்கி இருந்த ஒரு பெண்ணை கடற்படை மீட்டது.
காலி துறைமுகத்தின் பாதுகாப்பிலிருந்து இணைக்கப்பட்ட கடற்படைப் வீரர்கள் காலி துறைமுக நுழைவாயிலிலிருந்து காலி நகரத்திற்கு ஒரு நபர் கடலில் மூழ்கி இருப்பதைக் கவனித்தனர். உடனடியாக, நீரில் மூழ்கிய நபரை மீட்க கடற்படை ஒரு நிவாரண குழுவை அனுப்பியது.இவ்வாறு நீரில் மூழ்கிய ஒரு பெண்ணை கடற்படை மீட்டுள்ளது, மீட்கப்பட்ட பெண் காலியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டடத்தின் ஜட்டிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு கடற்படை மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி அளித்தனர், மேலும் அப் பெண் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவ்வாறு ஹிக்கடுவயில் வசிக்கும் 48 வயதான பெண்ணே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது தொடர்ப்பாக மேலதிக விசாரணைகளை கராபிட்டி, மருத்துவமனை காவல்துறை மற்றும் காலி துறைமுக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
|