பாதுகாப்பு செயலாளர் வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, 2019 டிசம்பர் 12, அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். பாதுகாப்புப் படைகளின் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, உடபட இராணுவ மற்றும் விமான தளபதி ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தின் பாலாலியில் உள்ள போர் வீரர்களின் நினைவு சின்னத்திற்கு பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு மலர் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, வடக்கு தீபகற்பத்தில் பணியாற்றும் முப்படை உறுப்பினர்களை பாலாலி விமானப்படை தளத்தில் உரையாடினார். இந் நிகழ்வுக்காக வடக்கு தீபகற்பத்தில் பணியாற்றும் முப்படை தளபதிகள் உட்பட முப்படையின் பல முத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் கழந்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு செயலாளர் காங்கேசந்துரையில் உள்ள வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர பாதுகாப்பு செயலாளரை அன்புடன் வரவேற்றார். வடக்கு கடற்படை கட்டளையின் கட்டமைப்பு மற்றும் வடக்கில் கடற்படையின் தற்போதைய பணிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவிக்க கட்டளை அதிகாரி (வடக்கு) நடவடிக்கை எடுத்தார். பின்னர் பாதுகாப்பு செயலாளரும் அவரது குழுவும் இலங்கை கடற்படையின் உத்தர நிலையத்தின் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு இடமளிப்பதற்காக புதிதாக கட்டப்பட்ட இறங்கு துறையில் கண்கானிப்பு சுற்றுப்பயண மொன்று மேற்கொண்டனர்.
பாதுகாப்பு செயலாளரும் அவரது குழுவும் வடக்கு கடற்படை கட்டளையால் செயல்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாண திட்டத்தை ஆய்வு செய்தனர், மேலும் கட்டளை சிவில் பொறியியல் அதிகாரி (வடக்கு) திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளருக்கும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுக்கும் இடையில் நினைவு பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.