சீனத் தூதரகம் கடற்படையின் "நீல பசுமைப் போருக்கு" சைக்கிள் மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் நன்கொடையாக அளிக்கிறது
இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உருவாக்கிய 'நீல பசுமைப் போரை' வலுப்படுத்த 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் சைக்கிள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை கடற்படைக்கு வழங்கியது.
இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்தில் போர், வான் மற்றும் கடல் விவகாரங்கள் தொடர்பான துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் சாங் குவான் ஜின் அவர்களால் சைக்கிள் மற்றும் மின்சார வாகனங்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். இங்கு 50 சைக்கிள்கள் மற்றும் 3 மின்சார வாகனங்கள் கடற்படைக்கு வழங்கப்பட்டன.
கடற்படையால் நீல பச்சை சொர்க்கமாக அறிவிக்கப்பட்டுள்ள திருகோணமலை கடற்படை கப்பல் பட்டரையில் வைத்து இந்த சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்கள் அதிகாரிகளுக்கு மற்றும் மாலுமிகளுக்கு விநியோகிக்கப்படும், அதன்படி, கடற்படை தளபதி குறித்த சைக்கிள்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவுக்கு இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கினார்.
இந்நிகழ்வுக்காக கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|