சுறா துடுப்புகளுடன் 08 நபர்கள் கைதுசெய்ய கடற்படை உதவி
2019 டிசம்பர் 9, அன்று மேற்கு கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுறா துடுப்புகளுடன் எட்டு பேரை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியில் கடற்படை மேற்கொண்ட சோதனையின் போது மேற்கு கடல் பகுதியில் சந்தேகமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றை கடற்படை தடுத்து நிறுத்தி மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடலோர பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்துள்ளது. அங்கு மேற்கொண்ட சோதனையின் போது, அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு அரிய வகை துடுப்புகளான தேங்காய் இலை துடுப்புகள் இரண்டு கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டது.
கப்பலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சுறா துடுப்புகளை கடற்படை கண்டறிந்துள்ளது, மேலும் எட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 19 முதல் 52 வயதுக்குட்பட்ட தொடுவாவ, தம்புல்ல மற்றும் லுனுவில பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள் மற்றும் சுறா துடுப்புகள் மேலதிக விசாரணைகளுக்காக திக்ஓவிட மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகள் திக்ஓவிட மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டு நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு அரிய வகையான சுறா பாதுகாப்பு பணிகள் இப்போது இலங்கையிலும் உலகெங்கிலும் நடந்து வருகின்றன. மேலும், மீன்வள மற்றும் நீர்வளத் துறை மூலம் அழிந்து வருகின்றதாக கருதப்படுகின்ற மினிமுது துடுப்புகள், தேங்காய் இலை துடுப்புகள், கஸ துடுப்புகள் பிடிபட்டது தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுறா என்பது கடல் சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு மீன் ஆகும், மேலும் இந்த சட்டவிரோத மீன்வளத்தை கட்டுப்படுத்த கடற்படை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.