கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 25 வது இளநிலைக் கடற்படை பணியாளர்கள் பாடநெறி வெற்றிகரமாக முடிந்தது
கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 25 வது இளநிலைக் கடற்படை பணியாளர்கள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 22 அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கல் 2019 டிசம்பர் 6 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் உள்ள அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் பிரசந்ந மஹவிதான, கடற்படை பயிற்சி இயக்குநர், கடற்படை இயக்குநர்கள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் வங்காளம் கடற்படை வீரர்கள் உட்பட இருபத்தி இரண்டு அதிகாரிகள் இந்த பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர். பின்வரும் அதிகாரிகளுக்கு பிரதம அதிதியால் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
பாடநெறியின் சிறந்த அதிகாரி (இலங்கை கடற்படை)
லெப்டினன்ட் கமாண்டர் ஆர்.எம்.சி.கே.ரத்நாயக்க
பாடநெறியின் சிறந்த அதிகாரி (பிற பாதுகாப்பு)
லெப்டினன்ட் கமாண்டர் எம்.கே.ஹாசான் (வங்காளம் கடற்படை)
பாடநெறியின் சிறந்த பேச்சாளர்
லெப்டினன்ட் டபிள்யூ.எம். திலகரத்ன
சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான தளபதியின் கோப்பை
லெப்டினன்ட் கமாண்டர் ஆர்.எம்.சி.கே.ரத்நாயக்க
இளநிலைக் கடற்படை பணியாளர்கள் பாடநெறி சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பாடத்திட்டத்தை வெற்றிகரமாகப் பின்பற்றும் அதிகாரிகளுக்கு சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வழங்கும் பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாவைப் பின்பற்ற வாய்ப்பு கிடைக்கும்.