இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டுவிழாவை 2019 டிசம்பர் 9 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இதற்கு இணையாக, மத நடவடிக்கைகள், சமூக சேவைகள் மற்றும் இரத்த தான திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்ச்சியான திட்டங்களை கடற்படை தொடங்கியுள்ளது.

நாட்டின் முதல் பாதுகாப்பு பிரிவான இலங்கை கடற்படை தனது பெருமைக்குரிய ஆண்டு நிறைவை குறித்து 2019 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் முல்லேரியாவ மனநல மருத்துவமனையில் பழைய கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இந்த பணியை மருத்துவமனை ஊழியர்கள் பாராட்டினார்கள்.

மேலும், 2019 டிசம்பர் 04 ஆம் திகதி வட மத்திய கடற்படை மருத்துவமனையில் இரத்த தானம் திட்டமொன்று நடைபெற்றது, அங்கு ஏராளமான மாலுமிகள் தானாக முன்வந்து இரத்த தான திட்டத்தில் கழந்துகொண்டனர். இந்த பணியை அந்த பணியை வெற்றிகரமாக செய்ய அனுராதபுர போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊழியர்களும், தம்புதேகம மற்றும் பதவிய அடிப்படை மருத்துவமனையில் இரத்த வங்கி ஊழியர்களும் பங்களித்தன.

அதே நாளில், இரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன், பூச்சாவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுன கட்டடத்தின் பிரதான ஆடிட்டோரியத்தில் இரத்த தானம் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. கராப்பிட்டி போதனா வைத்தியசாலை ஊழியர்கள், தேசிய இரத்தமாற்ற சேவை மற்றும் கடற்படை மருத்துவ ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு முழு பங்களிப்பை வழங்கினர்.

பெருமைமிக்க ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், கடற்படை தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளும் தொடர்ச்சியான மத மற்றும் சமூக திட்டங்களை மேற்கொள்ளப்படுத்தியுள்ளன, இது கெளனிய ராஜமஹா விஹாராயத்தில் ஒரு மத நிகழ்ச்சியில் நிறைவடையும்


Refurbishment of building complex at National institute of Mental health, Mulleriyawa


Blood donation programme at Naval Hospital (North Central Command)


Blood donation programme at SLNS Nipuna