தேசிய டெங்கு தடுப்பு திட்டத்திற்கு கடற்படை ஆதரவு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு ஜனாதிபதி பணிக்குழுவுடன் இணைந்து 2019 டிசம்பர் 2 முதல் 4 ஆம் திகதி வரை நடந்திய டெங்கு ஒழிப்பு திட்டங்களில் கடற்படையும் பங்கேற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் இனைந்து செயல்படுத்தி வரும் டெங்கு தடுப்பு திட்டத்துக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கொழும்பு, கம்பஹ, யாழ்ப்பாணம், மாதலே, மட்டக்களப்பு மற்றும் கல்முனை பகுதிகளில் கடற்படை கட்டளைகளில் இணைக்கப்பட்ட ஏராளமான கடற்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அங்கு சுற்றுச்சூழல் அமைப்பு பெரிதும் ஆராய்ந்து சுத்தம் செய்யப்பட்டது.மேலும், கடற்படை முகாம்களிலும் ஏராளமான டெங்கு ஒழிப்பு திட்டங்கள் நடைபெற்றுள்ளன, மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொடிய டெங்கு ஒழிப்பு திட்டங்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.

மேலும், எதிர்காலத்தில் இந்த தேசிய முயற்சிக்கு பங்களிப்பு செய்ய கடற்படை எதிர்பார்க்கிறது.