கப்பல்கள் / கைவினைகள் சமிக்ஞைகளை, கயிறுகள் மற்றும் முடிச்சி போட்டித்தொடர் 2019
கடற்படைக் கொடி கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கப்பல் / கைவினை சமிக்ஞைகளை, கயிறுகள் மற்றும் முடிச்சி போட்டித்தொடர் 2019 டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலையில் அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இப் போட்டித்தொடரில் பரிசு வழங்கும் விழாவில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, துறைத் தலைவர்கள், கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பல மாலுமிகள் பங்கேற்றனர்.
பெரிய கப்பல்கள், சிறிய கப்பல்கள் மற்றும் வேக தாக்குதல் படகுகள் என்று இந்த போட்டித்தொடர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதுடன் இதுக்காக கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல போட்டியாளர்கள் இறுதி சுற்றில் போட்டியிடுகின்றனர். அறிகுறிகள், கயிறுகள் மற்றும் முடிச்சுகள் என்ற தலைப்பில் சிறந்த கப்பல் மற்றும் படகு தேர்ந்தெடுப்பதே போட்டியின் நோக்கமானது. இலங்கை கடற்படை கப்பல் சாகர, இலங்கை கடற்படை கப்பல் ரனரிசி மற்றும் பி 450 மற்றும் பி 414 ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய அணிகள் முறையே பெரிய கப்பல்கள், சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் பிரிவுகளின் சிறந்த Semaphore மற்றும் Flashing சமர்ப்பிப்புக்காக கோப்பைகள் பெற்றுள்ளனர். மெலும் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல, இலங்கை கடற்படை கப்பல் உதார ஆகிய கப்பல்கள் பிரதிநிதித்துவப்படுத்திய அணிகள் மற்றும் படகு பிரிவில் கழந்துகொண்ட பீ 402 வேக தாக்குதல் படகு அணி சிறந்த கயிறுகள் மற்றும் முடிச்சி அணிகளாக தெரிவுசெய்யப்பட்டது. இலங்கை கடற்படை கப்பல் சாகர, இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப பிரதிநிதித்துவப்படுத்திய அணிகள் மற்றும் பீ 430 வேக தாக்குதல் படகு பிரதிநிதித்துவப்படுத்திய அணி சிறந்த ROR (Rule of the Road) அணியாக கோப்பை பெற்றுள்ளனர்.
போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி, பி 450 வேக தாக்குதல் படகை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் எல்.யு. ஏ.டப்.சி லன்ஸக்கார ROR பிரிவில் சிறந்த அதிகாரியாக கோப்பை பெற்றுள்ளார். கயிறுகள் மற்றும் முடிச்சுகள் பிரிவின் சிறந்த வீரராக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல கப்பலின் ஏ.கே.எம் சந்தருவன் கோப்பை பெற்றுள்ளார் Semaphore மற்றும் Flashing பிரிவின் சிறந்த வீரராக பீ 474 வேக தாக்குதல் படகின் டீ.கே.ஏ மதுவந்த கோப்பை பெற்றுள்ளார்.