கொழும்பு சுப்பர்குரொஸ் 2019 ஓட்டப் போட்டி வெலிசறையில் இடம்பெற்றது
இலங்கை கடற்படை மூன்றாவது தடவையாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2019 டிசம்பர் 01 ஆம் திகதி வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
30 ஆண்டுகால போரின்போது தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த கடற்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் கடற்படை ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் பிரதம அதிதியாக பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பங்கேற்றார்.
மூன்று ஆயுதப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓட்டுநர்கள், நாட்டின் முன்னணி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அதன்படி, 94 சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 67 மோட்டார் ஓட்டுநர்கள் பங்கேற்றனர், இதில் சைக்கிள் துறையில் 12 நிகழ்வுகளும், மோட்டார் நிகழ்வில் 11 நிகழ்வுகளும் உள்ளடங்கி 23 நிகழ்வுகள் உள்ளன. இங்கு நாட்டின் தனித்துவமான சைக்கிள் மற்றும் மோட்டார் ஓட்டுநர்களின் திறமைகளை காண வாய்ப்பு கிடைத்தது பின்வரும் சாதனைகளை கடற்படை வென்றது.
Standard 125 cc
நான்காம் இடம்- கடற்படை வீரர் ஜி.ஆர்.கே விஜேசேகர
Standard 250 cc - Race. 01
இரண்டாம் இடம் - கடற்படை வீரர் ஈ.பி குருசிங்க
Standard 250 cc - Race. 02
முதலாம் இடம் - கடற்படை வீரர் டி.எம்.டி.எஸ்.ஜே சந்தருவன்
இரண்டாம் இடம் - கடற்படை வீரர் ஈ.பி குருசிங்க
Racing 250 cc - Race. 01
மூன்றாம் இடம் - கடற்படை வீரர் ஈ.பி குருசிங்க
நான்காம் இடம் - கடற்படை வீரர் டி.எம்.டி.எஸ்.ஜே சந்தருவன்
Racing 250 cc - Race. 02
நான்காம் இடம் - கடற்படை வீரர் ஈ.பி குருசிங்க
ஐந்தாம் இடம் - கடற்படை வீரர் டி.எம்.டி.எஸ்.ஜே சந்தருவன்
இப் போட்டித் தொடரில் சைக்கிள் சாம்பியனாக விளையாட்டு வீரர் ஜே. குனவர்தன விருது வென்றார் போட்டியின் மோட்டார் வீரராக ஆஷான் சில்வா விருது வென்றார் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை பணிப்பாளர் நாயகம், இலங்கை மோட்டார் மற்றும் சைக்கிள் பந்தய சங்கத்தின் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும், ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கழந்து கொண்ட பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னவுக்கு கடற்படைத் தளபதி நினைவு பரிசொன்றும் வழங்கினார்.
|