69 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்
2019 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமையில் 2019 நவம்பர் 27 மற்றும் 28 திகதிகளில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி அருந்ததி ஜயநெத்தி அவர்களும் கழந்துகொன்டார்.
இலங்கை கடற்படையால் தொடர்ந்து எட்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமய விழாவில் தேசிய கொடி, பௌத்த கொடி உட்பட கடற்படை கட்டளைகளில், நிருவனங்களில் மற்றும் கப்பல்களில் 88 கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கப்பட்டது. ஸ்ரீ மஹா போதியின் ஆசிர்வாதம் பெறுவதுக்காக ஏற்பாடுசெய்துள்ள குறித்த விழா அனுராதபுரத்தின் அlமஸ்தானதிபதி, வட மத்திய மாகாணத்தின் பிரதான சங்கநாயக்க, கலாநிதி பல்லேகம சிரினிவாசாபிதான தேரர் உட்பட மஹா சங்கத்தேரர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகலுக்காக கடற்படை பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய உட்பட கடற்படை கட்டளைகளில் தளபதிகள், பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜைக்கு இனையாக அநுராதபுரம் ருவன்வெலி மகா சேய அருகில் கடற்படை பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த கப்ருக் பூஜையும் இடம்பெற்றது.
|