போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்கு கடற்படை மற்றும்பொலிஸாரின் கூட்டு நடவடிக்கை
நவம்பர் 23 அன்று திருகோணமலையில் கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்தனர்.
திருகோணமலையில் கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, 506 மதன மோதகங்கள் ஒரு கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது மற்றும் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அப்பகுதியில் வசிக்கும் 31 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் விசாரணையில் அவர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி சாலையோரம் காணப்பட்டதுடன் சந்தேக நபர் 65 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்தார். சந்தேக நபர் திருகோணமலை, விலங்குலமாவில் வசிக்கும் 31 வயதாவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகள் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினால் தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும்.