கடற்படையினால் சட்டவிரோத வலைகள் மீட்ப்பு
கடற்படை, மீன்வள ஆய்வாளர் அலுவலகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து 2019 நவம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் மடிதவேலியில் மேறகொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணத்தின் மடிதவேலியில் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை, கசய்ட்ஸ் மீன்வள ஆய்வாளர் மற்றும் யாழ்ப்பாண காவல்துறை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் எடுத்துச் செல்லப்பட்டன. இவை மீண்டும் எடுத்துச்செல்லும் நோக்கில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த மீன்பிடி வலைகள் யாழ்ப்பாணம், மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.