சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலையில் உள்ள இலந்தட்டுனு பாயிண்ட் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள், நவம்பர் 19 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, திருகோணமலையில் உள்ள இலந்தட்டுனு பாயிண்ட் பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி காணப்பட்டுள்ளதுடன் மேலும் டிங்கியைத் சோதித்தன் மூலம் அங்கீகரிக்கப்படாத மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படையினால் ஒரு டிங்கி, ஒரு ஓபிஎம், ஒரு ஜெனரேட்டர் மற்றும் ஐந்து விளக்குகளும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் 35 மற்றும் 48 வயதிற்குட்பட்ட புன்னாயடி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டள்ளனர்./p>
டிங்கி, ஓபிஎம், ஜெனரேட்டர், விளக்குகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் நபர்களுடன் திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.