கடற்படை நடவடிக்கை மூலம் 975 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது
2019 நவம்பர் 14, அன்று நெடுந்தீவு கலங்கரை விளக்கத்திற்கு வெளியே கடலில் ரோந்து சென்றபோது, கடற்படை 975 கிலோகிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தது.
நெடுந்தீவு கலங்கரை விளக்கத்திற்கு வெளியே உள்ள கடலில் ரோந்து செல்லும் போது சந்தேகத்திற்கிடமான பல பொதிகள் கடலில் மிதப்பதை வடக்கு கடற்படை கட்டளை கவனித்துள்ளது. அங்கு சந்தேகத்திற்கிடமான 15 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த பொதிகளை பரிசோதித்த போது, இந்த பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டன. கடற்படை தொடர்ந்து மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் காரணமாக கடத்தல்காரர்கள் குறித்த புகையிலை பொதிகள் கடலில் கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதுடன் குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்க உள்ளது.
மேலும், கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் கூட்டு நடவடிக்கைகள் மூலம் கடந்த சில நாட்களில் இலங்கை கடலுக்குள் பீடி இலைகளை கடத்த முயன்ற 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் மற்றும் நாட்டுக்குள் மேற்கொன்டுள்ள செயல்பாடுகள் மூலம் சுமார் 53 டன் சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
|