வடமேற்கு கடலில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மேலும் ஒரு கூட்டு நடவடிக்கை
இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இன்று (2019 நவம்பர் 14) வடமேற்கு கடலில் நடத்திய கூட்டு நடவடிக்கையில் பீடி இலைகளுடன் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கற்பிட்டி, குதிரைமலை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சிறிய மீன்பிடி படகொன்றை கடற்படை கவனித்துள்ளதுடன், குறித்த சிறிய மீன்பிடிக் படகை ஆய்வு செய்ய இலங்கை கடலோர காவல்படையின் கப்பலொன்று இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு சந்தேகத்திற்கிடமான படகு சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்த இந்திய படகொன்று என்பது தெரியவந்தது. மேலும் மேற்கொண்ட சோதனையின் போது படகு உள்ளே சுமார் 1400 கிலோகிராம் பி.டி இலைகள் அடங்கிய 46 பொட்டலங்கள் மற்றும் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 26,34 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் பீடி இலைகள் கடல் வழியாக கொண்டு வரப்பட்டு இந்த நாட்டில் மோசடிகாரர்களுக்கு ஒப்படைக்க முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளது. இந்த படகு மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடற்படையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், 2019 நவம்பர் 12 ஆம் திகதி, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் கூட்டு நடவடிக்கை மூலம் இலங்கை கடற்பரப்பில் பீடி இலைகள் கடத்த முயன்ற மூன்று இந்தியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், இலங்கை கடல் மண்டலத்தைப் பயன்படுத்தி இத்தகைய கடத்தல் நடவடிக்கைகளை கட்டுபடுத்துவதற்கு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புத் துறை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இக் காரனத்தினால் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுக்க கடத்தல்காரர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.