69 வது கடற்படை ஆண்டுவிழா முன்னிட்டு கலுவெல்ல தேவாலயத்தில் கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள்
இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டுவிழா 2019 டிசம்பர் 9 ஆம் திகதி காலீ கலுவெல்ல கத்தோலிக்க தேவாலயத்தில் மத வழிப்பாட்டுகள் மற்றும் வேன்ரித் முதியோர் இல்லத்தின் தானம் வழங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, காலி கலுவெல்ல தேவாலயத்தில் வைத்து போரில் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களுக்கு மற்றும் அனைத்து கடற்படையினருக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. மேலும் தாய்நாட்டுக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் இங்கு தந்தை காமிலஸ் கூரே பிரதான மத திட்டத்தை மேற்கொண்டார். அதன் பின் காலி வேன்ரித் நினைவு முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 65 வயதான தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் ஏராளமான மாலுமிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடற்படையின் இந்த முயற்சியை தேவாலயத்தில் தந்தையும், முதியோர் இல்லத்தின் போதகரும் பாராட்டினர். கடற்படையின் 69 வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களை உள்ளடக்கும் வகையில் எதிர்காலத்தில் மத, சமூக சேவை மற்றும் சமூக நலத் திட்டங்கள் நடைபெற உள்ளது